குழந்தை பிறக்க 10 நாட்களே இருந்த நிலையில் சோகம்.. 9 மாத கர்ப்பிணியான பெண் காவலர் விபத்தில் பலி : கணவர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 1:59 pm

திண்டுக்கல் : வத்தலகுண்டு பைபாஸ் அருகே நின்றிருந்த லாரியில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி அருகே தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் முசிறியில் காவலராகப் பணி புரிகிறார். இவரது மனைவி திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள வக்கம் பட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 27).

இவரும் திருச்சி காட்டுப்புத்தூரில் காவலராகப் பணிபுரிந்தவர். காவலர்களான கணவன் மனைவி இருவரும் வக்கம்பட்டியில் உள்ள சுகந்தியின் அம்மா வீட்டிற்கு திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளனர்.

காரினை சுரேஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் அருகே உள்ள குட்டியபட்டி அருகே இவர்களது கார் வந்தபோது அந்த சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியதில் முன்புறம் அமர்ந்திருந்த சுகந்தி சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சுகந்தி 9 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி