9 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு.. சாலை விபத்தில் கணவன் பலி : சோகத்தில் மனைவியின் விபரீத முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2024, 11:45 am
9 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு.. சாலை விபத்தில் கணவன் பலி : சோகத்தில் மனைவியின் விபரீத முடிவு!
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). விவசாயி. இவர் நேற்று முசிறி துறையூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார்.
மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண் குழந்தை சளி காரணமாக இறந்து போனது. மகன் அடுத்து கணவன் இறந்த விரக்தியில் சிலம்பரசன் மனைவி கலா(26) அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த முசிறி காவல்துறையினர் கலாவின். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.