9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : தப்பி ஓடிய காமுகன் போக்சோவில் கைது…
Author: kavin kumar11 February 2022, 2:26 pm
கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து அந்த சிறுமி உறவினருடன் வீட்டிற்கு செல்வதற்காக நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அத்திப்பாக்கம் மேட்டு தெருவைச் சேர்ந்த சகாயநாதன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், உறவினர் அங்கு வந்தபோது சகாயநாதன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையிடம் உறவினர் கூறியதையடுத்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் செய்த மணலூர்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சகாயநாதன் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.