உயிரை காவு வாங்க காத்திருந்த ஆபத்து.. திடீர் ஆய்வில் சிக்கிய காலாவதியான குளிர்பானங்கள்..!

Author: Vignesh
21 August 2024, 11:12 am

கோவை மாவட்டத்தில் 23 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் முழுமையான லேபிள் விபரம் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்து வருவதனால் கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கோவை மாவட்டத்தில் 18 பேர் குழு அடங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்களும் 9 குழுக்களாக பிரிக்கப்பட்டு கோவை மாநகரில் காந்திபுரம், வ.உ சி பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ் புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள், 18 மொத்த விற்பனையாளர் என மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 23 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் முழுமையான லேபிள் விவரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும், இது போன்ற காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!