ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட 957 பேர்.. விழுப்புரம் ரயில் நிலையத்தில காலை உணவு.. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 12:18 pm

ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட 957 பேர்.. விழுப்புரம் ரயில் நிலையத்தில காலை உணவு.. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணிகள்!

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகளுக்கு விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையத்தில் காலை உணவு பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 957 பயணிகள் மீட்கப்பட்டு பத்திரமாக சிறப்பு ரயிலில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து சென்னைக்கு செல்கின்றனர்

கடந்த இருதினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி திருச்செந்தூர் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பெய்த அதிதீவிர மழையின் காரணமாக சுற்று வட்டார பகுதிகள் வெள்ளகாடாக மாறியது.

இதனால் சாலை போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கபட்டது. அதேபோல ஸ்ரீ வைக்குண்டம் ரயில் நிலைய இருப்பு பாதை வெள்ளநீரால் சேதம் அடைந்தது இதனால் திருச்செந்தூர் – சென்னை ரயில் பயணிகளுடன் சிக்கியது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக
பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் ஹெலிகாப்டர் மூலமாகவும் சிக்கி தவித்த பயணிகளை படிப்படியாக மீட்டனர்.

தற்போது மீட்கப்பட்ட 957 பயணிகளையும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர் ஐந்து சிறப்பு பேருந்துகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய சிறப்பு ரயிலில் சென்னைக்கு இரவு 11 மணி அளவில் பத்திரமாக சென்னைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சிறப்பு ரயிலானது விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையம் வந்து அடைந்தது.

இவர்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையத்தில் காலை உணவு மற்றும் தண்ணீர் குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கபட்டது.

அப்போது பயணிகள் உணவு பொட்டலங்கள் வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். பின்னர் ரயில் 15 நிமிடங்களில் கிளம்பியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 748

    0

    0