மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்து கைதான கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (38). அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், போலி ஆவணம் மூலம் மோசடி செய்தது உறுதியான நிலையில், கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்று வந்த உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.