9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 5 மாத கர்ப்பம்… சிக்கிய சித்தப்பா : வேலியே பயிரை மேய்ந்த கொடுமை.!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 4:50 pm

கோவை : ஒன்பதாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இதனையடுத்து அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்த பொழுது சிறுமியின் சித்தப்பா பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் இந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் சித்தப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொண்டாமுத்தூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 711

    0

    0