9ம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் ; நீதி வேண்டி கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
28 November 2023, 12:56 pm

பள்ளி மாணவன் தற்கொலை அதிகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கே.வி.குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் – உஷா தம்பதியின் மகன் ஜீவரத்தினம் (14 ). இவர் கே.வி.குப்பம் பகுதியில் உள்ள (சாய் குருஜி பள்ளி) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், இவர் கடந்த 24ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பள்ளி நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கே.வி.குப்பம் காவல் நிலையத்தை பள்ளி மாணவனின் உறவினர்கள் முற்றுகையிட்டர்.

இதனைத் தொடர்ந்து, மாணவனின் தற்கொலைக்கு காரணம் பள்ளி நிர்வாகம் தான் காரணம் என கூறி பள்ளி நிர்வாகத்தின் மீது சரியான நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கே.வி.குப்பம் பகுதியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!