மாடு மேய்க்கும் போது நிலத்தில் திடீரென உருவான 10 அடி பள்ளம் : பதறிப் போன விவசாயி… அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 9:26 pm

குளித்தலை அருகே விவசாய மானாவாரி நிலத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வீரியபாளையம் பஞ்சாயத்து, கண்ணமுத்தம்பட்டியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான மானவாரி தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்க சென்றுள்ளார்.

மாடு மேய்த்து கொண்டிருந்த இடத்தில் திடீரென்று ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பயந்து அங்கிருந்து வெளியேறிய விவசாயி பள்ளத்தை குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்தார்,

ஊர் மக்கள் திடீர் பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்க்க வந்தனர். இந்தப்பள்ளமானது மூன்று அடி அகலம், 10 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற வீரிய பாளையம் பஞ்சாயத்து தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது காரணத்தை குறித்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 599

    0

    0