10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… போக்சோவில் 28 வயது இளைஞர்!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2024, 10:34 am
பத்து வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த புகாரில், தலைவாசல் வாலிபர் ‘போக்சோ’ வழக்கில், போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த, பெரியசாமி மகன் செல்வகுமார், 28. ஹோட்டலில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம், பத்து வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், ஆத்துார் மகளிர் போலீசார், செல்வகுமார் மீது, ‘போக்சோ’ வழக்கு பதிவு செய்து, நேற்று, அவரை கைது செய்தனர்.