ரயில் தண்டவாளத்திற்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஷாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 7:56 pm

ரயில் தண்டவாளத்திற்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஷாக்!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்திகேயபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் பிரத்தியங்கியா (வயது 15 ). இவர் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இதனிடையே நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீட்டுக்கு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிய நிலையில் இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் மாணவியை இரவில் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று மேல்பட்டி ரயில்வே நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் மாணவி பிரதிங்கியா சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மற்றும் குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் காணாமல் போன பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 822

    0

    0