10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம்..விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2023, 8:28 pm

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் சிறுமியை அவருடைய பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அப்பொழுது உறவினரான கார்த்திக் ராகவன் என்பவர் சிறுமியிடம் பழகி செல்போனில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு பதிவிறக்கம் செய்து கொடுத்து அதில் விளையாட சொல்லிக் கொடுத்துள்ளார்.

மேலும் அது மூலமாக சாட்டிங் செய்தும் வந்துள்ளார். விளையாட்டுக்கு அடிமையான சிறுமி கார்த்திக் ராகவனிடம் பழகி வந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் ராகவன் சிறுமியை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தி உள்ளார்.

சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டியுள்ளார். ஆபாசமாக வீடியோவாக எடுத்தும் சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பினார். அதிர்ச்சி அடைந்த சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்.

இது தொடர்பாக தாயிடம் சொன்னால் கண்டிப்பார் என்ற பயத்தில் கார்த்திக் ராகவனிடம் கெஞ்சியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் ராகவன் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பாலியல் சீண்டல் செய்வதை பெற்றோரிடம் தெரிவித்தால் உன் மீதும், உன் தாய் மீதும் ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
தொடர்ந்து தான் பாலியல் தொந்தரவு கொடுப்பதை யாரும் அறிந்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கூடம் செல்லக்கூடாது எனவும் எந்த உறவினரிடம் பேசக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

இதனால் மனம் உடைந்த சிறுமி பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தார். இது அவருடைய தாய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் தாய் தோழியிடம் உதவி கேட்டார். அவர் சிறுமியை தனியாக அழைத்து விசாரணை செய்த போது சிறுமி அழுது கொண்டு நடந்ததை கூறினார்.

இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று தாய் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்யாமல் புகார்தாரரிடம் சமாதானம் பேசி அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு 2022-ம் ஆண்டு மீண்டும் அப்போதைய துணை ஆணையரிடம் சிறுமியின் தாய் புகார் மனு அளித்தார். இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை ஆணையராக இருந்த சியாமளா தலைமையிலான போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதன்பிறகும் இன்ஸ்பெக்டர் இந்த புகார் தொடர்பாக சிறுமி நீதிமன்றத்தில் முறையான பதில் கூறவில்லை என்றால் நீங்கள் தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் எனவும் ஊடகங்களில் தெரியவந்தால் சிறுமியின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்தும் வெளியே சென்று விடும் எனவும் பயமுறுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு பார்த்து கார்த்திக் ராகவன் குற்றம் செய்திருப்பது உறுதியானதையடுத்து அவரை கைது செய்ய ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் 10 நாட்களுக்கு பிறகு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திக் ராகவனை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 463

    0

    0