13 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… தாய் பரபரப்பு புகார் : வேலியே பயிரை மேய்ந்த கொடுமை !

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 11:54 am

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அனீஸ் அகமது (வயது42) தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் (வயது13)அதே பகுதியில் உள்ள இஸ்லாமிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளுக்கு உடல்நல குறைவு காரணமாக மனைவி நசீமா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனிடையே இதுகுறித்து குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு வந்த புகாரை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது தந்தை மகளை பாலியல் பலாத்காரம் செய்து நான்கு மாதம் கர்ப்பமாக்கியது தெரியவந்தது

Father Arrest

இதனிடையே சிறுமியின் தந்தை அனீஸ்அகமது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையே சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து 4 மாதம் கர்ப்பமாகிய சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1166

    0

    0