தனியார் சொகுசு விடுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தமிழக பாஜக பிரமுகரின் கோர முகம்…!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 7:29 pm

தனியார் சொகுசு விடுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தமிழக பாஜக பிரமுகரின் கோர முகம்…!!

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார்.

பாஜக தலைவர்களோடு நெருக்கமாக இருந்து வரும் எம்.எஸ். ஷா, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனார்.

இதைத் தொடர்ந்து வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமிக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

பாஜக பிரமுகர் எம்.எஸ். ஷா, முதலில் தனது மனைவியிடம் கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததோடு மனைவியின் மூலமாக மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்,

சிறுமியின் தந்தை அளித்த இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்..எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நடத்தி வரும் பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்