தலைக்கேறிய போதையில் நாயை கொன்ற 17 வயது சிறுவன் : கோவை அருகே அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2023, 10:05 am

கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன்(சூர்யா) நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது.

இதில் நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த சிறுவன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து நாயின் தலையில் போட்டுள்ளார். இதில் நாய் அங்கேயே உயிரிழந்தது.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை கண்டித்துள்ளனர். மேலும் நாயின் உரிமையாளரான ஜீவா அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி