17 வயது சிறுமிக்கு காதல் வலை.. காஷ்மீர் அழைத்து சென்ற காமுகன் : கோவை சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2024, 12:00 pm
கோவையில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, காஷ்மீருக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி துணிக் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்று திரும்பி வீடு திரும்பவில்லை.
சிறுமியின் பெற்றோர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது சிறுமையை இதற்கு முன் வேலை செய்த துணிக் கடையின் உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்ததும், சிறுமி காணாமல் போனதில் இருந்து முகமது அயாஸ் மாயமாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வாலிபரின் பெற்றோர் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் வாலிபரும் சிறுமியும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் அறை எடுத்து தங்கி இருந்த போது காஷ்மீர் போலீசார் சோதனை செய்து பிடித்தனர்.
இது குறித்து காஷ்மீர் போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரூர் போலீசார் காஷ்மீர் சென்று வாலிபரையும், சிறுமியையும் மீட்டு விமானம் வாயிலாக கோவை வந்தனர்.
சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் முகமது அயாஸ் சிறுமியை காதலிப்பதாக கூறி ஓராண்டாக பழகி வந்ததும். தனக்கு தன் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதாகவும், அதனால் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி முகமது அயாஸ் கடந்த 13 ஆம் தேதி சிறுமியை அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்று உள்ளார்கள்.
அங்கு அறை எடுத்து தங்கிய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதும் தெரிய வந்தது.
பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அயாஸ் கைது செய்தனர்.