திருப்பூர் அருகே 17 வயது சிறுமிக்கு விடிய விடிய கூட்டுப் பாலியல் கொடுமை : அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2024, 9:41 pm

திருப்பூர் அருகே 17 வயது சிறுமிக்கு விடிய விடிய கூட்டுப் பாலியல் கொடுமை : அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த 9ம் தேதி இரவு வீரக்குமார சாமி கோவில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அதிகாலை வரை கூட்டு பலாத்காரம் செய்து மீண்டும் அதிகாலை கோவில் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் ‌.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடையதாக வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் (32), செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (27), வெள்ளகோவில், பாரதிநகரை சேர்ந்த தமிழ்செல்வன் (எ ) சதீஸ் (28), வெள்ளகோவில், ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளகோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (30) என 7 பேரை கைது தனிப்படை போலீஸார் கைது செய்து திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…