தந்தைக்காக சாலையோரம் காத்திருந்த 17 வயது சிறுமியை பைக்கில் கடத்தி பாலியல் பலாத்காரம் : பேக்கரி மாஸ்டர் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2022, 4:46 pm
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 25). அவர் அணைக்கட்டு பகுதியில் இருக்கும் தனியார் பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார்.
மேலும் திருமணமான இவருக்கு கடந்த வாரம்தான் பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் குடியாத்தம் அரசு கல்லூரியில் பி.ஏ தமிழ் படித்து வருகிறார்.
மேலும் மாணவி வார நாட்களில் கல்லூரிக்கு செல்வதும் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் துணிக்கடையில் தன் படிப்பு செலவிற்காக பணிபுரிந்தும் வந்துள்ளார்.
மேலும் அவ்வாறு பணிக்கு செல்லும் நாட்களில் ஒடுக்கத்தூரில் இருந்து கத்தாரி குப்பம் பகுதிக்கு பேருந்தில் கத்தரிகுப்பம் பேருந்து நிலையத்திலிருந்து அவரின் தந்தை வீட்டிற்கும் அழைத்து செல்வது வழக்கம்.
வழக்கம்போல நேற்று இரவு பணிக்கு சென்று விட்டு இரவு 8:30 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்து கத்தரிக்கும் பகுதியில் இறங்கியுள்ளார்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இவரை அழைத்துச் செல்ல நேற்று அவரின் தந்தை பகுதிக்கு வரவில்லை. அந்த நேரத்தில் இவரைப் பார்த்து பின் தொடர துவங்கிய பேக்கரி மாஸ்டர் சரத்குமார் செல்லும் வழியில் உள்ள வாழை தோட்டத்தின் அருகே செல்லும்போது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதை பொருட்படுத்தாமல் சிறுமி சென்று கொண்டே இருக்க மேலும் விடாமல் துரத்திச் சென்று சிறுமியின் கையைப் பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு நபர்கள் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்ததை பார்த்து அவரிடம் கையை விடு என கூறியதற்கு உன் வேலையை பார்த்து செல் என அவர்களிடம் தெரிவித்தும் உடனடியாக நீங்கள் செல்லவில்லை என்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது எனவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்த அந்த இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து உதவி கேட்டு சிறுமி கூச்சலிடவே உடனடியாக சிறுமியின் வாயை பொத்திக்கொண்டு அருகில் இருந்த வாழைத்தோட்டத்திற்குள் தரதரவென இழுத்துச் சென்று சிறுமி சத்தமிடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்தும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் அந்தக் காமக்கொடூரன்.
மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் சிறுமியிடம் பலாத்காரம் ஈடுபட்ட பின் சிறுமியிடம் இதை உன் வீட்டில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
அங்கிருந்து அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி தன் பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கவே அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் இரவு 12 மணி அளவில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்திகளின் பெயரில் இன்று காலை புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் சரத்குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்த பேக்கரி மாஸ்டரையும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்று பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பேக்கரி மாஸ்டர் சரத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.