தேர்வு எழுதிவிட்டு வந்த +2 மாணவிக்கு அரிவாள் வெட்டு : தப்பியோடிய இளைஞர்… தூத்துக்குடியில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 5:01 pm

தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் பில்ஸ் 2 தேர்வு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
இன்று இறுதி தேர்வு எழுதிவிட்டு வெளியே வெளியே வந்த நிலையில் அவரை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் அந்த மானவியிடம் பேச முயன்றுள்ளார்.

அப்போது அந்த மாணவி அவரிடம் பேச்சு கொடுக்காமல் விலகி சென்றதால் அத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கீலே விழுந்தார். பின்னர் வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை பிடித்து தட்டப்பாரை போலீஸிடம் ஒப்படைத்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!