கொதிக்கும் குருமா அண்டாவில் விழுந்த 2 வயது குழந்தை பலி: தஞ்சையை உலுக்கிய சம்பவம்..பெற்றோர்களே கவனமா இருங்க..!!

Author: Rajesh
4 April 2022, 7:39 pm

தஞ்சை: கும்பகோணத்தில் கொதிக்கும் பானிபூரி குருமா அண்டாவினுள் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவ்ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா தங்கள் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு ரிஷி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி மாலை அனுசுயா பானிபூரிக்கு குருமா தயார் செய்து அண்டா ஒன்றில் சூடாக கீழே இறக்கி வைத்துள்ளார். பின்னர் பிற பணிகளை செய்வதற்காக அனுசுயா சென்றுவிட்டார். அண்டா அருகில் கவனிக்க ஆள் இல்லாத அந்நேரத்தில் அவ்வழியே வந்த குழந்தை ரிஷி விளையாடியபடி தவறி குறுமா அண்டானுக்குள் விழுந்துள்ளான்.

இதில் சூடு காயமுற்று குழந்தை ரிஷி கதறியுள்ளான். அவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் அவரை மீட்டு அம்மாசத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ரிஷி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை ரிஷி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை ரிஷியின் இறப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ