தனியாக இருந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்… 21 வயது இளைஞரின் வெறிச்செயல் : ஷாக் சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2023, 1:56 pm

திருப்பூர், அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதனையடுத்து மூதாட்டி சத்தமிடவே வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

மேலும் இதுகுறித்து மூதாட்டி திருமுருகன்பூண்டி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்த திருமுருகன்பூண்டி போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ், 21, என்பதும், அவர் மூதாட்டி வீட்டின் அருகேயுள்ள தறி குடோனில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?