உரிமையாளர் கண் முன்னே சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்.. புதுமனை புகுவிழாவிக்கு தயாரான நிலையில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2024, 9:50 pm

உரிமையாளர் கண் முன்னே சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்.. புதுமனை புகுவிழாவிக்கு தயாரான நிலையில் சோகம்!

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பனார் வாய்க்கால் இருபுறமும் சுற்றுச்சுவர் கட்டுவது மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக கடந்த இரண்டு மாதமாக இந்த பணி நடைபெற்று வருகிறது சுற்று சுவர் கட்டுவதற்காக ஜே. சி. பி. இயந்திரம் மூலம் ஆற்றின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது.

இதனால் உப்பனார் வாய்க்கால் அருகே அதிக பள்ளம் தோண்டப்பட்டதால் வாய்க்கால் கரையோரம் உள்ள வீடுகள் சேதம் அடைந்தது. பல வீடுகள் சாய்ந்து காணப்பட்டு வந்தது.

இதனை தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென புதிதாக கட்டி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது.

இதனைக் கண்ட அங்கே கூடி இருந்த மக்கள் நாலாபுரமும் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் அதிர்டஷ்வசமாக உயிர்தப்பினார்கள்.

இதனை அடுத்து அதிக அளவில் பள்ளம் தோண்டப்பட்டதே வீடு இடிந்ததற்கான காரணம் எனக்கூறி அந்த பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது மேலும் அந்த பகுதி இளைஞர்கள் மனித சங்கிலி போன்று மறியலால் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமங பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தின் அளிக்கப்பட்டதன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது

இது குறித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறும்போது,புதிதாக கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்து உள்ளது வீட்டின் உரிமையாளருக்கு முதலமைச்சர் புதுச்சேரி அரசு உரிய நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வீட்டின் உரிமையாளர் சாவித்திரி கூறும் போது, வீட்டில் இருந்த நகை பாத்திரம் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் சேதம் அடைந்து விட்டது என கண்ணீர் மல்க கூறினார்.

புதிதாக கட்டிய கிரகப்பிரவேசத்திற்கு தயாரான வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது மேலும் இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!