தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய கிராமம்

Author: kavin kumar
11 February 2022, 6:57 pm

திருவள்ளூர் : பழவேற்காடு அருகே தேங்காய் தொண்டையில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதில் இளைய மகன் சஞ்சீஸ்வரன்(3) இன்று காலையில் வீட்டிலிருந்த தேங்காயினை சாப்பிடும்போது தேங்காய் துண்டொன்று தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் குழந்தை மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மருத்துவமனையில் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருபாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…