அரசு பள்ளியில் சுவர் இடிந்து 3ஆம் வகுப்பு மாணவி படுகாயம்.. அலட்சியத்தால் நடந்த அவலம் : பெற்றோர்கள் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 2:47 pm

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பாண்டி இவர் கேரளாவில் கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி முத்துலட்சுமி கூலி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சீலையம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் கம்பர் நடுநிலைப் பள்ளியில் இவர்களது இரண்டாவது மகள் ரித்திகா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு சென்று தனது வகுப்பறையில் அமர்ந்திருந்த போது ஜன்னல் அருகே இருந்த ஜன்னல் சுவர் ரித்திகா மீது இடிந்து விழுந்தது இதில் மாணவி ரித்திகா படுகாயம் அடைந்தார்.

உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக மாணவியை கொண்டு சென்றனர்.

பள்ளி மாணவி ஒருவர் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதால், தற்காலிகமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ