தெருவில் நடந்து சென்ற 4 வயது குழந்தை… கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்து குதறிய நாய்கள்.!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2025, 7:37 pm
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரநகரில் உள்ள கோல்டன் ஹைட்ஸ் காலனியில் நான்கு வயது குழந்தையை இரண்டு தெரு நாய்கள் துரத்தி வந்து கடித்து தாக்கின.
இதையும் படியுங்க : இட்லி கடையில் எதிர்பாரா டுவிஸ்ட்.. வெயிட்டான நடிகருடன் மாஸ் காட்டும் தனுஷ்..!!
குழந்தையின் தாய் உடனடியாக ஓடி வந்ததால் நாய்கள் குழந்தையை விட்டு சென்றன. குழந்தையின் கால்கள், இடுப்பு மற்றும் தொடைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஐதாராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சி.சி. கேமிரா காட்சிகள் வெளியான நிலையில் தொடர்ந்து தெருநாய்களின் தாக்குதல் எங்கு பார்த்தாலும் நடைபெறும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காயப்பட்டு வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.