5½ வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சி… 65 வயது முதியவருக்கு கோவை நீதிமன்றம் கொடுத்த ”சூப்பர்” தண்டனை!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2024, 11:59 am

கோவை மாவட்டத்தில் கடந்த 2019 – ம் ஆண்டு 5½ வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பக்திராஜ் (65) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளி பக்திராஜ்-க்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல் நிலைக் பெண் காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!