கோவையில் வழிதவறி வந்த 5 மாத குட்டி யானை… தாய் யானையை தேடி பயணம் : வனத்துறை செய்த நெகிழ்ச்சி செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 11:56 am

கோவையில் வழிதவறி வந்த 5 மாத குட்டி யானை… தாய் யானையை தேடி பயணம் : வனத்துறை செய்த நெகிழ்ச்சி செயல்!!

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன.

வால்பாறை அடுத்துள்ள பன்னி மேடு எஸ்டேட்டில் ஐந்து மாத குட்டியானை ஒன்று தாய் யானையிடம் பிரிந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்து வந்தது. குட்டி யானை நிற்பதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் விரைந்து வந்து தனியாக சுற்றி திரிந்த குட்டி யானையை பிடித்து பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் குட்டியை பிரிந்த தாய் யானை ஆக்ரோசத்துடன் பண்ணி மேடு பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது. மேலும் தாய் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்திவிடும் என வனத்துறையினர் தாயிடம் குட்டி யானையை சேர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர் குட்டி யானை தாய் யானையிடம் சேர்ந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி