6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 61 வயது முதியவர்.. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 8:10 pm

6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 61 வயது முதியவர்.. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!!

திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் சேர்ந்தவர் சகாயமரியநாதன் (61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், பஞ்சப்பூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் மூளைச் சாவு அடைந்தாா்.

மேலும் படிக்க: அவருக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை : ஈவிகேஎஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை!

இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சகாயமரியநாதனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க குடும்பத்தினர் மற்றும் உறவினா்கள் சம்மதம் தெரிவித்தனா்.

குடும்பத்தாரில் சம்மதத்தின் பேரில் மரணமடைந்த அவரது கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒரு நோயளிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை தனியாா் மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், இரு கண்கள் திருச்சியில் கண் பாா்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும், உடலின் தோல், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

சகாய மரிய நாதனின் குடும்பத்தினருக்கு தானம் பெற்ற நோயாளிகள் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 378

    0

    0