ஏரியில் கட்டைப்பையில் கிடந்த பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை… ஆடு மேய்த்தவர் கொடுத்த துப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2024, 10:45 am

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுப்பணித்துறை ஏரி உள்ளது இந்த பகுதியில் தினந்தோறும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்த்து அவற்றிற்கு தண்ணீர் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்பகுதியில் உள்ள முட்புதரில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டது அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து ஏதோ குழந்தை அழுவது போல் சத்தம் கேட்கிறது என்று முட்பதனின் மேல் பகுதியில் பார்த்தபோது ஒரு கட்டப்பையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது.

உடனடியாக கட்டைப் பையை புதரில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்தபோது அதில் பிறந்து சில மணி நேரங்களையான ரத்தக்கரையுடன் கூடிய அழகிய ஆண் குழந்தை உள்ளது. அவற்றின் உடல்களில் ஆங்காங்கே எறும்புகள் கடித்தவாறு உள்ளதால் உடல் சிவந்த நிலையில் காணப்பட்டது.

உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததின் பேரில் 108 அவசர ஊர்தி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து குழந்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் யாருடைய குழந்தை எதற்காக வீசப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் இப்பகுதிகளில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?