மாடு மீது சாலையில் சென்ற பைக் மோதி விபத்து : வாலிபர் பரிதாப பலி… மற்றொருவர் படுகாயம்..!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 10:15 am

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெமிலி அடுத்த சயனபுரம் காலனியில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சஞ்சய் (21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தமிழரசன் என்பவரும் நெமிலி பஜாரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.

மாடு மீது சாலையில் சென்ற பைக் மோதி விபத்து : வாலிபர் பரிதாப பலி… மற்றொருவர் படுகாயம்..!!

அப்போது சயனபுரம் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே வரும் போது எதிரே வந்த மாடு மீது அதிவேகமாக மோதியுள்ளனர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் லேசான காயத்துடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாடு மீது சாலையில் சென்ற பைக் மோதி விபத்து : வாலிபர் பரிதாப பலி… மற்றொருவர் படுகாயம்..!!

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!