லாரியை முந்த முயன்ற பைக்.. கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 6:29 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலுரில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

பின்னால் வந்த இரு சக்கர வாகனம் லாரியை முந்திச் சென்றது. அப்போது எதிரே பொங்கலூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளனது.

இதில் இரு சக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. அதிலிருந்த பொங்கலூரை சேர்ந்த இசக்கி பாண்டி,கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலரிந்து சம்பவயிடம் விரைந்து சென்ற அவினாசிபாளையம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் காயமடைந்தவர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி