சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்டு எருமையை தீயணைப்பு துறையினர் உதவியோடு மீட்ட வனத்துறையினர் அதை பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே உள்ள புது குய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி. வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது. இவரது தோட்டத்திற்கு அருகாமையிலேயே உள்ள கிணற்றில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டு எருமை ஒன்று எதிா்பாராதவிதமாக சுமார் 100 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
அதிகாலை கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு எட்டி பார்த்த போது உள்ளே காட்டு எருமை தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மூலம் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த காட்டு எருமையை கிரேன் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு எருமையை பத்திரமாக மீட்டனர். பின்னர், வனக்கால்நடை மருத்துவர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். நீண்ட நேரம் போராடி காட்டு எருமையை மீட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் அப்பகுதி மக்கள் பாரட்டு தெரிவித்தனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.