அண்ணாமலை வருகையின் போது காவலரை ஆபாசமாக திட்டிய பாஜக நிர்வாகி… வாக்குவாதம் செய்ததால் தட்டி தூக்கிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 8:26 pm

அண்ணாமலை வருகையின் போது காவலரை ஆபாசமாக திட்டிய பாஜக நிர்வாகி… வாக்குவாதம் செய்ததால் தட்டி தூக்கிய போலீஸ்!

நேற்று கொளத்தூர் அகரம் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட என் மண் என் மக்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

அண்ணாமலை நிகழ்ச்சி முடித்து விட்டு சென்ற பிறகும் தொடர்ந்து பாஜகவினர் அவர்கள் தாரை தப்பட்டைகளை அடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது பாஜகவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கின்ற ரவி 50 என்ற நபர் அங்கிருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் கணேஷ்குமார் 31 என்ற நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி அனைவரும் முன்னிலையிலும் அவமானப்படுத்தி உள்ளார். இதனை யடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வில்லிவாக்கம் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ரவியை கலைந்து போகும் படி கூறியுள்ளார்.

ஆனால் ரவி ஆய்வாளரிடமும் மரியாதை குறைவாக நடந்து கொண்டு அவரை திட்டி உள்ளார். போலீசார் தொடர்ந்து ரவியை எச்சரித்ததால் அந்த இடத்திலிருந்து அவர் ஓடிவிட்டார்.

இது குறித்து காவலர் கணேஷ்குமார் செம்பியம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தார். செம்பியம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி சென்னை வெற்றி நகர் திருவேங்கடம் தெரு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கின்ற ரவி 50 என்ற நபரை இன்று காலை கைது செய்தனர்.

இவர் பாஜகவில் நிர்வாகியாகவும அனைத்து இந்து அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இதனை யடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!