ஊருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை.. அதிர்ந்து போன கோவை மக்கள் : பதை பதைக்க வைக்கும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2023, 2:33 pm
ஊருக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை.. துப்பாக்கியால் சுட்ட வனத்துறை : பதை பதைக்க வைக்கும் வீடியோ!!
கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் தென்படுவதாலும் ஒருவரது ஆட்டை கொன்று சென்றதாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள், மான்கள், காட்டு மாடுகள் என பல்வேறு வன விலங்குகள் தென்படுவது வழக்கம்.
இந்நிலையில் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது கருஞ்சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை கொண்டு சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன்பு வந்த கருஞ்சிறுத்தை அப்பகுதியில் உள்ள நாய்கள், கோழிகள், ஆடுகளை கொன்றுவிட்டு சென்ற நிலையில் தற்போது மீண்டும் வந்து நேற்று ஒருவரது ஆட்டை கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்பொழுது அப்பகுதி மக்கள் எடுத்து வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.