தவறாமல் அட்டெண்டன்ஸ் போடும் மாடு: குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காத்திருக்கும் அதிசயம்: எதற்காக? யாருக்காக….!!

Author: Sudha
17 August 2024, 12:02 pm

கரூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் (ஆடு, மாடுகள்) ஆங்காங்கே பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள டெல்லி ஸ்வீட்ஸ் பேக்கரி என்ற தனியார் பேக்கரியில் தினந்தோறும் அதன் உரிமையாளரிடம் பிரட் மற்றும் பன் கேட்டு ஒரு பெரிய மாடு வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 5 அடி நீளமுள்ள கருப்பு நிறமான கழுத்தில் கயிறு மட்டுமே கட்டியிருக்கும் மிகப்பெரிய மாடு டெல்லி ஸ்வீட் அண்ட் பேக்கரி உரிமையாளர் ரத்தினம் என்பவருக்காக நீண்ட நேரமாக வாசலிலே காத்துக்கொண்டிருக்கும்.

பின்னர் உரிமையாளர் வந்து மூன்று பிரட் பாக்கெட்டுகளையும் பன் வகைகளையும் ஊட்டி விடுவார்.

தேடி வரும் மாட்டுக்கு உணவளித்து அந்த மாட்டை அனுப்பி வைக்கும் இந்த செயல் கரூர் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த பேக்கரியின் நிறுவனரும், இவரது சகோதரருமான மறைந்த திரு.லட்சுமண பெருமாள் என்பவரிடமும் இதே மாடு,கன்று குட்டியாக இருக்கும் போதே, பிரட் சாப்பிட்டு செல்லுமாம்.மேலும் அவரும் இதே போல தான் ஊட்டி விடுவார் என்கின்றனர் அருகிலிருப்பவர்கள்.

உரிமையாளர் மட்டுமே தனக்கு உணவு தருவார் என்று காத்திருந்து பின்னர் சாப்பிட்டு செல்லும் இந்த மாட்டின் பாசப் போராட்டம் கரூர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ