திமுக அமைச்சர் கண்முன்னே திடீரென பற்றி எரிந்த கார் : கோவையை தொடர்ந்து குமரியிலும் பரபரப்பு.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2022, 7:03 pm
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்டம், பாலூர் சந்திப்பு பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆசீம் என்பவர் இப்பகுதியில் கார் ஓட்டி வந்து கொண்டிருந்த போது, காரின் முன்புறத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது. உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரிந்தது.
கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அமைச்சர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.