ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து : திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பலியான சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 11:14 am

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் காரில் பயணித்த தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லம்ம நாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் உடல் நசுங்கி நான்கு பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற ஹைவே பெட்ரோலிங் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யா என்ற பெண்ணை மீட்டு தீவிர சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க: திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம்.. விசாரணையில் ஷாக் : உறவினர்கள் போராட்டம்!

மரணமடைந்த நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சுவாமிநாதன்(40), ராகேஷ்(12),ராதா பிரியா (14), கோபி (23) என்று தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்த சத்யா மரணம் அடைந்த சுவாமிநாதன் மனைவி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் .

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கிருஷ்ணா மாவட்ட போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!