திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதிய கார்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!

Author: Vignesh
19 August 2024, 11:37 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் இன்று இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது வேகமாக வந்த ஆம்னி கார் அவர்கள் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு திவரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!