உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2022, 12:03 pm
உளுந்தூர்பேட்டை அருகே கார் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு ரெண்டு பேர் படுகாயம்
சென்னை ராயப்பேட்டை இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் உசேன் மகன் ஏஜாஸ் (வயது 28). இவருடைய மனைவிக்கு சேலத்தில் குழந்தை பிறந்துள்ளது.
இதனை பார்க்க தனது குடும்பத்தினருடன் நேற்று சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஒரு காரில் மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த காரை ஏஜாஸ் ஓட்டி சென்றார், காரில் அவருடைய தாய் ஹமீம் (வயது 50), தங்கை அம்ரின் (வயது 22) சித்தி நமீம் (வயது 45) அவருடைய மகள் சுபேதா (வயது 21) ஆகிய ஐந்து பேர் சென்றுள்ளனர்.
இந்த கார் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் ஏஜாஸ் காரை தடுப்புக்கட்டையில் மோதியதில் அங்கிருந்து கார் சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்து கார் நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஹமீம், அம்ரின், சுவேதா ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர், காரை ஓட்டி சென்ற ஏஜாஸ் மற்றும் அவருடைய சித்தி நவீம் ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தினால் உளுந்தூர்பேட்டை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . உடன் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது