லாரி மீது நேருக்கு மோதி அப்பளம் போல நொறுங்கிய கார்.. கோர விபத்தில் 6 பேர் பலி.. தென்காசியில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 11:16 am

லாரி மீது நேருக்கு மோதி அப்பளம் போல நொறுங்கிய கார்.. கோர விபத்தில் 6 பேர் பலி.. தென்காசியில் சோகம்!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான 6 பேரும் புளியங்குடியை சேர்ந்தவர்கள் என்றும் குற்றாலத்தில் குளித்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து காரணமாக தென்காசி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர்.

மீட்பு பணிகள் முடிந்த நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 394

    0

    0