நிலைத்தடுமாறிய கார்.. சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்து கோர விபத்து : ஜூனியர் பெண் வழக்கறிஞர் உட்பட 2 பேர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 6:55 pm

சாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் பாரதி மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு சாத்தூரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி சாலை சென்டர் மீடியனில் மோதி கார் எதிர்ப்புறம் சாலையில் உருண்டோடியது.

இதில் ஜூனியர் வழக்கறிஞரான மோனிகா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கார் ஓட்டுநர் அசோக் குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வழக்கறிஞர், மைக்கேல் பாரதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அம்மைநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!