நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்… நூலிழையில் உயிர் தப்பிய 2 பேர் : தீயில் கருகி எலும்புக்கூடானது!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 1:28 pm

நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்… நூலிழையில் உயிர் தப்பிய 2 பேர் : தீயில் கருகி எலும்புக்கூடானது!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ்.இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவரது நண்பர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

இநநிலையில் இன்று திருச்சியில் உள்ள தனது நண்பரை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அழைத்து வருவதற்காக ராஜன் என்பவரை டிரைவராக நியமித்து திருச்சிக்கு அனுப்பி உள்ளார்.

திருச்சிக்கு வந்த ராஜன் மைக்கேல்ராஜின் நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து நெய்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவினால் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனை கவனித்த டிரைவர் ராஜன் காரை சாலையோரமாக நிறுத்த முயற்சிப்பதற்குள் தீ பற்றி கார் முழுவதும் மளமளவென காரில் இருந்த இரண்டு பேரும் உடனடியாக வெளியேறினர் இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் கார் கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனாலும் கார் முற்றிலும் கருகி நாசமானது. இச்சம்பவத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவலறிந்த சமயபுரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 381

    0

    0