சிக்கன் கடைக்குள் பாய்ந்த கார்.. தூக்கி வீசப்பட்ட பெண் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2024, 10:47 am

சிக்கன் கடைக்குள் பாய்ந்த கார்.. தூக்கி வீசப்பட்ட பெண் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திக் என்பவர் அவரது வீட்டு புதுமனை புகு நிகழ்வானது சித்தேரி பகுதியில் உள்ள தென்றல் நகரில் நடைபெற்றது அவர் கடந்த இரண்டு நாட்களாக தூங்காமல் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது சித்தேரி பகுதியில் இருந்து பென்னாத்தூர் பகுதிக்கு அவரது உறவினர்களுடன் (ஹோண்டா கிராண்ட் ஐ 10 ) காரில் வந்து கொண்டிருந்த கார்த்திக் அப்போது தூக்க கலப்பில் சாலையில் இருந்த வேகத்தடையின் மேல் ஏற்றியதில் நிலை தடுமாறி அருகே இருந்த பழனி என்பவரின் சொந்தமான உணவக கடையின் உள் கார் நுழைந்து முபாரக் மனைவி சாயிஷாவின் மேல் மோதி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள் ஆகியுள்ளது

உடனடியாக கணியம்பாடியில் உள்ள வேலூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்த சாய்ஷாவை தூக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர வயசான மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடையின் மேல் வெள்ளை நிறம் சாயம் பூசப்படாததால் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் உயிர் இழப்பு எதுவும் இல்லை சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?