காரில் சென்ற பெண்களை துரத்திய திமுக கொடி பொருத்திய கார் : ஆதரவாளரா? அனுதாபியா? அதிமுக நறுக்!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2025, 12:59 pm
சென்னையில் நேற்று இரவு காரில் வந்த பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் துரத்திய வீடியோஇணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றுள்ளது.
இது குறித்து அதிமுக ஐடி விங் தனது X தளப்பதிவில், சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
இதையும் படியுங்க : சிபிசிஐடி வளையத்தில் பாஜக எம்பி.. அரை நாளாகத் தொடர்ந்த கிடுக்குப்பிடி விசாரணை!
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில், சட்டம் இருக்கிறதா? காவல்துறை இருக்கிறதா? திமுக கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, “இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது” என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் திமுக அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு!
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
— AIADMK IT WING – Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 29, 2025
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை… pic.twitter.com/Z03hAuRLml
இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா? இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் ஸ்டாலின்? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?