வாயில் ஒரு சிகரெட்.. மூக்கில் ஒரு சிகரெட்.. வித்தை காட்டிய போதை ஆசாமி : முகம் சுழிக்க வைத்த வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2023, 6:18 pm

வாயில் ஒரு சிகரெட்.. மூக்கில் ஒரு சிகரெட்.. வித்தை காட்டிய போதை ஆசாமி :முகம் சுழிக்க வைத்த வீடியோ வைரல்!!

திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது இப்ப பேருந்து நிலையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.

அதேபோல் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து செல்கின்றன.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இன்று மாலை மது போதையில் இருந்த மாற்றுத்திறனாளி இரண்டு சிகரெட்டுகளை பத்தவைத்து மூக்கில் ஒன்று வாயில் ஒன்று என புகைத்ததும் அதேபோல் மது போதை உச்சத்தில் நெருப்போடு இருந்த சிகரட்டை தலைமுடியில் வைத்ததும் தலைமுடி எரிவது கூட தெரியாமல் மது போதையில் சிகரெட் வித்தைகளை செய்து கொண்டுருந்தார்.

பயணிகள் பொதுமக்கள் பார்த்துச் செல்லும் பகுதியில் செய்தது அனைவர் மத்தியில் முகசூழிப்பை ஏற்படுத்தியது.பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவிகள்.பெண்கள் வரும் பகுதியில் மாற்றுத்திறனாளி மது போதையில் சிகரெட் வித்தையில் ஈடுபட்டது திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளார்களா என்பதை கேள்விக்குறியாகி உள்ளது

மேலும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மட்டும் தான் மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளது இதனால் தினமும் மது பிரியர்கள் பேருந்து பயணிகளுக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பை சூழ்நிலை உள்ளது இதனால் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள மதுபான கூட்டங்களை அனைத்தையும் அகற்றிவிட்டு பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

https://vimeo.com/892875912?share=copy

மேலும் இது போல் மது போதை பிரியர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 445

    0

    0