நோயாளிக்கு ஊசி போடும் தூய்மை பணியாளர்… தரம் உயர்த்தப்பட்டும் மருத்துவர்களை நியமிக்காதது ஏன்..? அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்!!
Author: Babu Lakshmanan14 December 2022, 1:50 pm
பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஊசி போடும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை சமீபத்தில் தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் அதிக அளவு பரமக்குடி அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்கும் ஒருவருக்கு அங்குள்ள தூய்மை பணியாளர் ஊசி போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இவ்வாறு சிகிச்சை அளிப்பதால் அவ்வப்போது உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவர்கள் சரி செய்து நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.