காவு வாங்கிய சொந்தக் கிணறு.. தங்கையை தாங்கிப் பிடித்தவாறே உயிரை விட்ட கல்லூரி மாணவி!!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மகள்கள் தர்ஷினி (19) இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். மற்றொரு மகள் வேம்பு (16) இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.
மகன் லோகேஸ்வரன் (13 )ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை இவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது.
அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். தாய் சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தர்ஷனியும் ,வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
அப்போது வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார். தங்கை மூழ்குவதை கண்ட தர்ஷினி தங்கச்சியை மீட்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார். தங்கையை மீட்கும் முயற்சி பலன் அளிக்காத நிலையில் சகோதரிகள் இருவரும் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கினர்.
இதனை கரையின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்த தம்பி லோகேஸ்வரன் உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து போன சகோதரிகள் உடலை சடலமாக மீட்டனர். இதை அடுத்து முசிறி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிணற்று நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் சகோதரிகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.