படியில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர்… நேர்ந்த விபரீதம் : தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 1:57 pm

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் தனியார் பேருந்தில் படியில் தொங்கியவாறு பயணம் செய்த கல்லூரி மாணவன் தவறி விழுந்து பலி ஒரு மாணவன் படுகாயம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்லால் (வயது 19). இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி STC தனியார் கல்லூரியில் BSC கம்ப்யூட்டர் சைன்ஸ் பயின்று வந்தார்.

இவர் உடுமலையில் அறை எடுத்து தங்கியுள்ளார். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் கோவையில் இருந்து பழனி செல்லும் SRK என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியவாரு பயணம் செய்துள்ளார்.

அப்போது வேமாக சென்ற பேருந்து திப்பம்பட்டி அருகே ஒரு வளைவில் திரும்பும் போது படியில் இருந்த மாணவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.

இதில் பேருந்தில் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மதன்லால பரிதாபமாக உயர்ந்தார். மேலும் ஆல்வின் (வயது 19) என்ற மாணவன் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த மாணவன் ஆல்வின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக கூட்டத்தை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் விஜயகுமார் (வயது 46) மற்றும் நடத்துனர் ரகுபதி (வயது 32) இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவன் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!