கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொல்லை… சுதாரித்த மாணவி : சிக்கிய இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2024, 1:09 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயதான சிறுமி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் தனது காதலனுடன் பேருந்தில் சென்றிருப்பது போன்ற வீடியோவை பழனியை சேர்ந்த முஜிப் ரகுமான் என்பவர் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார்.

பின்னர் அதை வைத்து அந்த சிறுமியிடம் நல்லவர் போல் நடித்து கல்லூரிக்கு செல்லும்போது என்னுடைய காரில் ஏறு இல்லையென்றால் அம்மாவிடம் போட்டோவை காட்டி விடுவேன் என்று கூறி சிறுமியை காரில் கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளார்.

பின்னர் அந்த சிறுமி காரில் ஏறும்போதே ஆடியோ ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அவனோடு தான் உல்லாசமாக இருப்பாயா என்னுடன் உல்லாசமாக இருக்க மாட்டாயா? என்றும் ,அதற்கு நேற்றே தற்கொலை செய்து கொண்டுருப்பேன் என்று சிறுமி கூறுகிறார்.

அப்போது நேற்றே அதை செய்திருக்க வேண்டும் என்று கூறுவது போல , அஞ்சு நிமிசம் டச் மட்டும் பன்னிக்கறேன் என்பது அழைப்பது போலவும் ,சிறுமி கண்ணீர் விட்டு அழுகிறார்.

அந்த இளைஞர் சமாதான படுத்திய ஆடியோ வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மேலும் படிக்க: பாமக, விசிக ரெண்டுமே சாதி கட்சிதான்.. அதானிக்காக நான் ஏன் உழைக்கணும் : பரபரப்பை கிளப்பும் பிரமுகர்!

போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து அந்த இளைஞர் போக்சோ வழக்கு மற்றும் பிற வழக்குகளில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 217

    0

    0