மாணவியுடன் பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan30 January 2024, 8:13 pm
மாணவியுடன் பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது அவ்வழியாக
வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் கார்த்திக் (21), மற்றும் மாணவி ஜெயலலிதா (19), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார் விசாரணை வழக்கு பதிவு செய்து இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..